பிரான்ஸ் ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர் புகை பிரயோகம்

 


பிரான்ஸில்  கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்படும் நிலையில் அதனை தடுத்து நிறுத்தும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் முன்னெடுக்கப்படும் Freedom Convoy  ஆர்ப்பாட்ட பேரணியால் ஈர்க்கப்பட்ட வர்கள் பிரான்ஸ் தலைநகர் பெரிசிலும் இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனுமதி வழங்கப்படாத இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நடத்த நிறுத்தும் நோககில் தலைநகரில் பொலிஸார் கடுமையாக நடந்து வருகின்றனர்.

நகருக்குள் நுழைய முற்படும் வாகனங்களுக்கு 334 அபராதங்கள் விதித்துள்ளதுடன் 54 பேரை கைது செய்துள்ளதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.