ஏலியன்கள் வேற்று கிரகங்களில் இல்லை

 


விண்வெளியில் பிற கோள்களில் ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் பரவுகிறது.

ஏலியன்கள் தொடர்பான ஹாலிவுட் படங்களும் வெளிவந்துள்ளன. இதனால், மக்களின் மனதில் வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவே கருதப்பட்டு வந்தன.

இந்நிலையில், அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் வேற்று கிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதில், மிக சக்தி வாய்ந்த ரேடியோ டெலஸ்கோப் மூலம் ஆய்வு செய்தனர்.

இதன் முடிவில், ஏலியன்கள் இருப்பதற்கான எந்த ஆதரமும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறப்பட்டுள்ளதாவது:-

விண்வெளியில், வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. நட்சத்திரங்கள், பிற கோள்களில் இருந்து எந்த அதிர்வுகளும் கண்டறியப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.