ஏலம் போகாத உலகின் முன்னணி வீரர்கள்!!
ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர உணவகத்தில் இன்று தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் அதிரடி வீரரான சுரேஷ் ரெய்னா ஏலம் போகவில்லை.
ஐபிஎல் போட்டியில் சிறந்த வீரராக வலம் வந்த ரெய்னா விலை போகாதது சென்னை அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா வீரர் மில்லர் மற்றும் அவுஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர் சகீப் அல்ஹசன் ஆகியோரை ஏலம் எடுப்பதில் எந்த அணியும் விருப்பம் காட்டவில்லை.
ராபின் உத்தப்பா, ஜேசன் ராய், ஆகியோர் அடிப்படை விலையில் ஏலம் போனார்கள். ராபின் உத்தப்பா சென்னை அணியும் ஜேசன் ராய் குஜராத் அணியும் ஏலம் எடுத்தது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை