முட்டை சமோசா!!
1. கோதுமை மாவு – 100 கிராம்
2. சின்ன வெங்காயம் – 50 கிராம்
3. முட்டை – 2 எண்ணம்
4. சீரகம் – 1/4 தேக்கரண்டி
5. நல்ல எண்ணெய் – 3 தேக்கரண்டி
6. கடலை எண்ணெய் – தேவையான அளவு
7. மிளகுத்தூள் பொடி – தேவையான அளவு
8. உப்பு - தேவையான அளவு
2. சின்ன வெங்காயம் – 50 கிராம்
3. முட்டை – 2 எண்ணம்
4. சீரகம் – 1/4 தேக்கரண்டி
5. நல்ல எண்ணெய் – 3 தேக்கரண்டி
6. கடலை எண்ணெய் – தேவையான அளவு
7. மிளகுத்தூள் பொடி – தேவையான அளவு
8. உப்பு - தேவையான அளவு
1. கோதுமை மாவில் இரண்டு ஸ்பூன் கடலை எண்ணெய் மற்றும் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் திரட்டிக் கொள்ளவும்.
2. ஈரத்துணியால் பிசைந்த மாவினை மூடி, அரைமணி நேரம் வைத்திருக்கவும்.
3. சின்ன வெங்காயத்தை பொடியான சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
4. சிறிதளவு கோதுமை மாவினை எடுத்துக் கொண்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பசைபோல் கலக்கிக் கொள்ளவும்.
5. வாணலியை அடுப்பில் வைத்து, நல்ல எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்க்கவும்.
6. சீரகம் பொரிந்ததும், சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
7. வெங்காயம் பாதி வதங்கியதும், முட்டை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு சேர்த்து ஒருசேரக் கிளறவும்.
8. பின்னர் அதனுடன் மிளகுப்பொடி போட்டு, முட்டையை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
9. பிசைந்த சப்பாத்தி மாவினை, சிறு உருண்டைகளாக்கவும்.
10. சிறு உருண்டையை கோதுமை மாவினைப் பயன்படுத்தி, மிகவும் மெல்லிய வட்ட சப்பாத்தியாக விரிக்கவும்.
11. இவ்வாறாக எல்லா உருண்டைகளையும் மெல்லிய சப்பாத்திகளாக விரிக்கவும்.
12. தோசைக் கல்லில் விரித்த சப்பாத்திகளை எண்ணெய் ஊற்றாமல், மேற்புறம் லேசாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
13. ஒவ்வொரு சப்பாத்தியையும் மூன்று துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
14. வெட்டிய துண்டினை கூம்பாக மடித்து, கோதுமை மாவு பசையினை வைத்து ஓரங்களை ஒட்டிக் கொள்ளவும்.
15. கூம்பிற்குள் வதக்கிய முட்டைக் கலவையை வைத்து, ஓரங்களில் கோதுமை மாவு பசையினைத் தடவி மூடிக்கொள்ளவும்.
16. இவ்வாறாக எல்லாவற்றையும் செய்யவும்.
17. வாணலியை அடுப்பில் வைத்து, கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சமோசாக்களைப் பொரித்துக் கொள்ளவும்.

நன்றி முத்துக்கமலம் பன்னாட்டு
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை