இறப்பதற்கு முன் இலங்கையர் வெளியிட்ட பதிவு!
அவுஸ்திரேலியாவில் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட இலங்கையர் பதிவிட்ட பதிவு ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
இதன்போது, “தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுக்க முடிவு செய்துள்ளதாக” ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அவுஸ்திரேலியாவில் இலங்கையரான இந்திக குணத்திலகா (40). இவருக்கு 6 வயதில் கோஹன் என்ற மகனும், 4 வயதில் லில்லி என்ற மகளும் இருந்தனர். குணத்திலகா தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது இரு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு குணத்திலகா உயிரை மாய்த்து கொண்டிருக்கிறார்.
குணத்திலகா சில காலமாகவே மிகுந்த மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார் என தெரியவந்துள்ளது.
அவரின் சமூகவலைதள பதிவுகள் பலவும் அதையே பிரதிபலிக்கின்றன. இந்த நிலையில் குணத்திலகா கடந்த ஆண்டு ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
அதில், நான் தனிப்பட்ட முறையில் எனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுக்க முடிவு செய்துள்ளேன்.
நாம் இறந்தவுடன் கூட இந்த பூமியில் உங்கள் கால் தடத்தை ஏன் அதிகரிக்க வேண்டும்? என பதிவிட்டுள்ளார்
கருத்துகள் இல்லை