போர்க்கப்பலை அனுப்புகிறது அமெரிக்கா!
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு உதவ போர் விமானம் மற்றும் ஏவுகணை அழிக்கும் போர்க்கப்பலை அமெரிக்கா அனுப்புகிறது.
யேமன் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு உதவ அமெரிக்கா போர்க்கப்பல்களையும் போர் விமானங்களையும் அனுப்பும் முடிவை எடுத்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக தகவல்படி, யு.எஸ்.எஸ். கோல் என்ற ஏவுகணை அழிக்கும் கப்பலை அமெரிக்கா ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அனுப்புகிறது. இது அங்குள்ள கடற்படையுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கும், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாய்ட் ஆஸ்டினுக்கும் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடலுக்கு பின்னர் இந்த செய்தி வெளிவந்துள்ளது.
இந்த உரையாடலின் போது, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் சிலரைக் கொன்ற ஹெளதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் குறித்து, இருவரும் விவாதித்ததாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெளதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் அமெரிக்க மற்றும் ஐக்கிய அரபு அமீரக படை வீரர்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளதாக பென்டகன் கூறுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்துடனான கூட்டாண்மைக்கு அமெரிக்கா உறுதியுடன் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் லோயிட் ஆஸ்டின் கூறியுள்ளார்.
கடந்த மாதம், ஹெளதி கிளர்ச்சியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை