இரண்டாயிரம்! தங்கக்காசு!!


சேலையூர் என்னும் ஊரில் கலிவரதன் என்றொரு மிராசுதார் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஏகப்பட்ட நிலங்கள் இருந்தன. நிலத்தில் பயிரிட்டு ஏராளமான பொருள்கள் சம்பாதித்து வந்தார். அவரிடம் நிறையப் பொருள் இருந்தாலும் ஒருவருக்கும் ஒரு பைசாகூட கொடுக்க மனம் வராது. தம்முடைய வீட்டில் நல்ல உணவு சமைக்கக் கூட அவர் விரும்ப மாட்டார். கருமிகளிலேயே கடைந்தெடுத்த கருமி அவர்.

அவருடைய நிலத்தின் ஒரு பகுதியில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. பழங்காலத்து ஆலமரம். அதில் பறவைகள் எந்நேரமும் இருக்கும். அதன் கீழே வழிப் போக்கர்களும், ஆடு மாடுகளும் நிழலுக் காகத் தங்கி இளைப் பாறுவதுண்டு.
பயிர்த் தொழிலில் நல்ல வருமானம் வரவே பழைய ஆலமரத்தை வெட்டி எறிந்துவிட்டு, அந்த நிலத்திலும் பயிரிட கலிவரதன் விரும்பினார். தன்னுடைய வேலைக்காரர்களில் ஒருவனை அனுப்பி அதனை வெட்டிவிடுமாறு கூறினார்.
நான் அந்த வேலையைச் செய்ய மாட்டேன். அந்த ஆலமரம் பழங்காலத்து மரம். அதில், தேவதை குடியிருப்பதாகக் கூறு கின்றனர். நான் அதனை வெட்டினால், எனக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டுவிடும்!'' என்றான் வேலைக்காரன்.
கலிவரதன் மற்ற வேலைக்காரர்களிடம் கூற, அவர்களும் மரத்தை வெட்ட மறுத்து விட்டனர். கடைசியில் தாமே அதனை வெட்டி எறிந்து விட வேண்டுமென்ற நோக்கத்துடன் கோடாரியை எடுத்துக்கொண்டு ஆலமரத்தை அடைந்தார்.
ஆலமரத்தின் கீழே ஒரு பிச்சைக்காரன் அமர்ந்திருந்தான். கலிவரதனைப் பார்த்த பிச்சைக்காரன், ஐயா, சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆயிற்று; ஏதாவது காசு கொடுங்கள், பசியைப் போக்கிக் கொள்கிறேன்,'' என்றான்.
இதைக் கேட்டதும், கலிவரதனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
காசு வேணுமா, சோம்பேறிப் பயலே! எங்காவது போய் வேலை செய்து சம்பாதிப்பதுதானே! போ! போ,'' என்று அவனை விரட்டினார்.
பிச்சைக்காரன் போனதும் கலிவரதன் தம் கையிலிருந்த கோடாரியினால் மரத்தின் அடிப் பாகத்தில் ஓங்கி வெட்டினான்.
அடுத்தகணம் மரத்தின் மையத்தில் ஒரு கதவு திறந்தது. உள்ளேயிருந்து ஒரு தேவதை வெளியே வந்தது.
கதவைத் தட்டினீர்களா? வாருங்கள் உள்ளே! இன்று எங்கள் அரசருக்குப் பிறந்த நாள். உள்ளே வந்து எங்களுடன் விருந்து சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்,'' என்று கலிவரதனைப் பார்த்துக் கூறியது தேவதை.
உங்கள் அரசரின் பிறந்த நாள் என்கிறாய். விருந்து என்கிறாய். நான் ஏதாவது பரிசுகள் தர வேண்டுமா?'' என்று தேவதையைப் பார்த்துக் கேட்டார் கலிவரதன்.
அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நீங்கள் வந்தாலே எங்களுக்கு மகிழ்ச்சி,'' என்றது தேவதை.
கலிவரதன் தேவதையின் பின்னால் சென்றார். உள்ளே நீளமான கூடம் ஒன்று இருந்தது. அதில் அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. மேஜை நாற்காலிக ளெல்லாம் போடப்பட்டிருந்தன. மேஜையின் நடுவில் தேவதைகளின் அரசர் அமர்ந்திருந் தார். அவன் தலையில் வைரம் பதித்த தங்க கிரீடம் ஜொலித்துக் கொண்டிருந்தது. கையில் தங்கச் செங்கோல் இருந்தது.
தேவதைகளின் அரசர் கலிவரதனை அன்புடன் வரவழைத்து தம் பக்கத்திலிருந்த ஆசனத்தில் அமரச்செய்தார். மேஜைமேல் உயர்த்தரக் தின்பண்டங்கள் தட்டுகளில் பரிமாறப்பட்டு இருந்தன.
நீங்கள் எங்கள் விருந்தாளியாக வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. சாப்பிடுங்கள்,'' என்று கலிவரதனைப் பார்த்துக் கூறினான் தேவதை களின் அரசர்.
கலிவரதன் தம் ஆயுளில் அம்மாதிரியான உணவு பொருள்களைக் கண்டதில்லை. மேஜை மேலிருந்த தின்பண்டங்களை விரும்பிச் சாப்பிட்டார்.
கலிவரதன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, இந்த ஆலமரத்திற்கும் இது இருக்கும் நிலத்திற்கும் எவ்வளவு ரூபாய் கேட்கிறீர்கள்?'' என்று கலிவரதனிடம் கேட்டார் தேவதைகளின் அரசர்.
இதைக் கேட்ட கலிவரதன், என்னுடைய நிலத்தை நான் யாருக்கும் விற்பதாக இல்லை,'' என்றார்.
ஆயிரம் பொற்காசுகள் தருகிறேன்!'' என்ற தேவதைகளின் அரசர் பக்கத்திலிருந்த ஒரு தேவதையைப் பார்த்தார்.
மறுகணம் அந்தத் தேவதை ஒரு பையைக் கொண்டு வந்து அரசரிடம் கொடுத்தது.
தேவதைகளின் அரசர் அந்தப் பையைத் கலிவரதனிடம் கொடுத்து, இதற்குள் ஆயிரம் தங்க நாணயங்கள் உள்ளன. இந்த விலைக்கு உம் நிலத்தையும் இந்த ஆலமரத்தையும் விற்கச் சம்மதமா?'' என்றார்.
மரத்தை வெட்டி விற்றால் நிறையப் பணம் கிடைக்கும். நிலம் வேறு இருக்கிறது. இரண்டாயிரம் தங்க நாணயங்கள் கொடுத்தால் கொடுத்து விடுகிறேன்!'' என்றார் கலிவரதன்.
சரி!'' என்று கூறிய தேவதைகளின் அரசர் மீண்டும், அந்தத் தேவதையைப் பார்த்தார். தேவதை மீண்டும் ஒரு பணமுடிப்பைக் கொண்டு வந்து கொடுத்தது.
இப்போது மகிழ்ச்சிதானே! தாங்கள் இரண்டாயிரம் தங்க நாணயங்கள் பெற்றுக் கொண்டு இந்த ஆலமரத்தையும், நிலத்தையும் எனக்கு விற்றுவிட்டதாக ஒரு கடிதம் எழுதித் தாருங்கள்!'' என்றார் தேவதைகளின் அரசர்.
கலிவரதனும் தேவதைகளின் அரசர் சொன்னவாறே ஒரு கடிதம் எழுதித் கொடுத்து விட்டுப் பண முடிப்புகளை சட்டையின் உட்புறம் இருந்த பையில் பத்திரப்படுத்திக் கொண்டார். அப்போது தேவதைகளின் அரசர் பக்கத்திலிருந்த தேவதையிடம் ஏதோ கூறவே, அது ஒரு கூடை நிறையத் தின்பண்டங்களைக் கொண்டுவந்து கலிவரதனின் முன்னால் வைத்தது.
ஐயா, வீட்டில் உள்ள உங்கள் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் இந்தத் தின்பண்டங்களைத் தாருங்கள்,'' என்று தின்பண்டக் கூடையைத் கலிவரதனிடம் கொடுத்தார் தேவதைகளின் அரசர்.
கலிவரசன் தின்பண்டக் கூடையுடன் வெளியே வந்தார். மரத்தடியில் உட்கார்ந்தார்.
இந்தத் தின்பண்டங்களை எடுத்துப்போய் நமது மனைவிக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்தால் அவர்கள் நாக்கு கெட்டுப்போய் விடும். இதைப் போல் உணவு வகைகளை அடிக்கடி கேட்பார்கள். அதனால் செலவுதான் மிகுதியாகும் என்று நினைத்தவராகக் கூடையி லிருந்த தின்பண்டங்கள் அனைத்தையும் அவரே சாப்பிட்டார். பின்னர் சட்டைப் பைக் குள்ளிருந்து பண முடிப்பு களை எடுத்து எண்ணிப் பார்த்தார். அவற்றில் இரண்டாயிரம் தங்க நாணயங்கள் இருந்தன.
இந்த மரம் என்னுடையது. இந்த மரத்தில் உள்ள சொத்து முழுவதும் என்னுடையது. அப்படியிருக்க இந்தத் தேவதைகளின் அரசன் வெறும் இரண்டாயிரம் தங்க நாணயங்கள் மட்டுமே எனக்குக் கொடுத்து விட்டு என்னை ஏமாற்றிவிட்டான். முதலாவதாக என் அனுமதி யின்றி என் மரத்தில் அவனும், அவனைச் சேர்ந்தவர்களும் குடியேறியதே குற்றம்' என்று கூறிகதவைத் திறந்தார்.
கதவு திறந்து கொண்டது.
கலிவரதன் உள்ளே நுழைந்தார். உள்ளே மேஜை நாற்காலி முதலியவை அப்படியே இருந்தன. ஆனால், தேவதைகள் எதையும் காணவில்லை. தேவதைகளின் அரசர் மட்டும் நாற்காலியில் உட்கார்ந்தவாறே தூங்கிக் கொண்டிருந்தார். அவருடைய தங்கக் கிரீடமும், தங்கச் செங்கோலும் மேஜை மேல் கிடந்தன.
ஏமாற்றுக்காரனே, இரண்டாயிரம் தங்க நாணயங்கள் மட்டும் கொடுத்து என்னை ஏமாற்றி விடலாம் என்று பார்த்தாயா? அதுதான் நடை பெறாது,'' என்று தேவதைகளின் அரசரைப் பார்த்துக் கூவினார் கலிவரதன்.
தேவதைகளின் அரசர் எழுந்திருக்க வில்லை. நல்ல தூக்கத்திலிருந்தார்.
சரி, இவனிடம் கத்திப் பிரயோசனம் இல்லை என்று நினைத்த கலிவரதன் அங்கு மூலையில் இருந்த தங்க நாணயங்கள் அனைத்தையும் வாரி ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டார். பின்னர் மேஜைமேல் இருந்த தங்கக் கிரீடத்தை எடுத்துத் தன் தலையில் சூட்டிக் கொண்டு, தங்கச் செங்கோலையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
மரத்துக்குள்ளிருந்து வெளியே வந்ததும் கலிவரதனுக்கு ஆழ்ந்த தூக்கம் வந்துவிட்டது. தான் கொண்டு வந்த மூட்டையைத் தலையில் வைத்துக் கொண்டு மரத்தடியில் ஒரு புறம் படுத்துக் கொண்டார்.
மீண்டும் அவர் கண் விழித்துப் பார்த்த போது அவரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான பேர் நடமாடிக் கொண்டிருந்தனர்.
கண்ணுக்குத் தென்பட்ட இடமெல்லாம் பசும்புல் தரையாக இருந்தது. குழந்தைகள் புல் தரையில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே கணவன், மனைவியர் மரத்தடியில் உட்கார்ந்து மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு காவலாளி அந்தப் பக்கமாக வந்தான். அவனைப் பார்த்ததும் கலிவரதன், முதலில் இவர்களையெல்லாம் விரட்டி அடி. இது என்னுடைய நிலம். இந்த நிலத்தில் என் அனுமதி இல்லாமல் இவர்கள் எப்படி வந்தனர்?'' என்று கத்தினார்.
தாத்தா, இது பொதுப் பூங்கா. இந்த இடம் கலிவரதன் என்ற ஒரு கருமிக்குச் சொந்த மான இடம். அவர் இந்த ஊரை விட்டுப் போய் நூறு வருடங் களுக்கு மேல் ஆகிறது. மறு படியும் திரும்பி வரவேயில்லை. அவருடைய குடும்பத்தார் இந்த நிலத்தை அரசாங்கத்திற்குக் கொடுத்துவிட்டனர். அரசாங்கம் இங்கே ஒரு பொதுப் பூங்காவை அமைத்திருக்கிறது,'' என்றான் காவலாளி.
அட கடவுளே, நூறு வருடங்களாகவா நான் தூங்கிக் கொண்டிருந்தேன்?' என்று கூறியவாறே மூட்டையை பிரித்துக் தங்க நாணயங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தார் கலிவரதன்.
மூட்டைக்குள் கற்களும், ஓட்டுத் துண்டுகளும் இருந்தன. தலையில் போட்டிருந்த தங்கக் கிரீடத்தை எடுத்துப் பார்த்தான் கலிவரதன். பிச்சைக்காரர்கள் அணியும் ஒரு தகர போணியைப் போல் இருந்தது. தங்கச் செங்கோலுக்குப் பதில் மரத்தினால், ஆன தடி இருந்தது.
இனி என்ன செய்வதென்று புரியாமல் தலையில் அணிந்திருந்த தகர போணியை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ணங்' என்று சத்தம் கேட்டது.
யாரோ ஒருவன் கலிவரதனின் கையிலிருந்த தகர போணியில் ஒரு பைசா நாணயங்களைப் போட்டு விட்டுச் சென்றான்.
தன் கருமித்தனத்தாலும், அதிகம் பேராசைப் பட்டதாலும், ஏற்பட்ட நிலைமையை எண்ணி வருந்தினார் கலிவரதன்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.