உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

 


கொரோனா மருத்துவ கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துபவை என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் தற்போது ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து உலக நாடுகளில் மருத்துவமனைகளில் நிரம்பி வழிகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரது எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு மருத்துவ உபகரணங்கள், ஊசிகள் பயன்படுத்தப்படுகின்றன. உலக அளவில் மருத்துவ கழிவுகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பல்வேறு விஞ்ஞானிகள் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருவர்.
இதேபோன்று தற்போது உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளிடம் பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபயோகப் பொருட்கள் பயன்பாட்டுக்குப் பின்னர் கழிவுகளாக மாறி வெளியே கொட்டப்படுகின்றன.
இவை சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தடுப்பு மருந்து கண்ணாடி குடுவைகள், கொரோனா பரிசோதனை கருவிகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுகள் டன் கணக்கில் மருத்துவ கழிவுகளாக குவிந்து உலக நாடுகளை மாசுபடுத்தி வருகின்றன.
இந்த கழிவுகள் மூலமாக எளிதாக கொரோனா பரவும் அபாயமும் உள்ளது. கொரோனா மருத்துவ கழிவுகளில் நீண்ட நாள் உயிர் வாழும் தன்மை உடையவை என்பதால் இவற்றை பத்திரமாக அப்புறப்படுத்த வேண்டும். இவற்றை தீயில் இடுவது நீர்நிலைகளில் கொட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகள் இந்த மருத்துவ கழிவுகளால் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. மருத்துவ பயன்பாட்டுப் பொருட்கள் முடிந்தவரை மறுசுழற்சி செய்யப்படும் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும். பிளாஸ்டிக் உபயோகத்தை குறைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவர்கள் அணிந்துகொள்ளும் கொரோனா பாதுகாப்பு உடைகள் கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. உலகம் முழுவதும் தோராயமாக 80 ஆயிரம் டன் பாதுகாப்பு உடைகள் குப்பைகளாக மாறியுள்ளன. பலநூறு திமிங்கலங்களின் எடைக்கு சமமான இந்த குப்பைகளில் எதிர்காலத்தில் உலக சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.