மீனவர்கள்இன்று யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி போராட்டம்!

 


யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் மற்றும் ஏ – 9 வீதியை முடக்கி இன்று போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது என யாழ். மாவட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்திய மீன்வர்களின் அத்துமீறலைக் கண்டித்து 3 நாட்களாகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் யாழ். மாவட்ட மீனவர்களுக்கு உரிய தீர்வு இதுவரை கிடைக்காத நிலையில் அவர்கள் இன்று மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

அத்துடன் மறுதினம் இலங்கையின் சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை ஏற்ற விடாமல் போராட்டம் கடுமையாக இருக்கும் எனவும் யாழ். மாவட்ட மீனவர்கள் எச்சரித்தனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.