மட்டக்களப்பு ஊடகவியலாளர் தேவபிரதீபன் மீது தாக்குதல்!!

 


மட்டக்களப்பைச் சேர்ந்த ஐபிசி தமிழ் ஊடகவியலாளரான இலட்சுமனன் தேவபிரதீபன் எனும் ஊடகவியலாளரே  சனிக்கிழமை(26) தாக்குதலுக்கு இலக்காகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.... 


வந்தாறுமூலை பிரதான வீதியில் அமைந்திருந்த பேருந்து தரிப்பிடம் ஒன்று இடித்து அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் உபாதைக்குள்ளான ஊடகவியலாளர் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார.


தான் சுதந்திரமாக செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒருவர் வந்து தன்னை தாக்கியதாகவும், இதனால் தலையின் பின்பக்கம், மற்றும் கையிலும், வலி ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறு தன்னைத் தாக்கியவர் கிழக்கு பல்கழலைக்கழகத்தில் பணிபுரியும் ஒருவர் எனவும், பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் இலட்சுமனன் தேவபிரதீபன் தெரிவித்துள்ளார்.


அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு பகுதியில் ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை சுயாதீனமாக மேற்கொண்டு வரும் போது அவர்களது கடமைக்கு இடையூறு மேற்கொள்ளப்பட்டு, தாக்குதல்களும் இடம்பெற்றுவருகின்றமை எடுத்துக்காட்டத்தக்கது. எனினும் இவ்வாறான ஊடகவியாலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் மிலேச்சத்தனமான சம்பவங்கள் தொடiர்பில் ஊடக அமைப்புக்களும், சிவில் அமைப்புக்களும், கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.