பலிக்குமா பாபா வங்காவின் கணிப்பு!!

 


அதிபர் புடினே உலகை ஆளுவார் என்று மறைந்த பாபா வங்கா கூறிய கணிப்பு தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. 


பல்கேரியனை சேர்ந்த பாபா வங்கா என்பவர் தனது சிறிய வயதில்மின்னல் தாக்கத்தினால்  கண் பார்வையை இழந்திருந்தார். பின்னர் தனக்கு எதிர்காலத்தில் நடக்க இருப்பது அனைத்தும் தெரிவதாகக் கூறிய அவர் தனது 85 வயது வரையிலும் பல்வேறு எதிர்கால நிகழ்வுகளை கணித்து கூறியிருந்தார். அந்த வகையில் இவருடைய 85% கணிப்புகள் நடந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.


மேலும் கடந்த 50 ஆண்டுகளில் நடைபெற்ற 100 க்கும் மேற்பட்ட தகவல்களை பாபா வங்கா கணித்திருந்தார். அதில் பெரும்பாலானவை நடந்திருக்கின்றன. அமெரிக்காவின் வர்த்தக கோபுரம் அழிக்கப்படும், அமெரிக்காவின் 44ஆவது அதிபராக ஒரு கருப்பினத்தவர் வருவார், 2016இல் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் வலிமை பெறும், ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகிவிடும் என்பன போன்ற இவருடைய கணிப்புகள் உண்மையில் பலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடினைப் பற்றிய பாபா வங்காவின் ஒரு கணிப்பு இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. அதில் அனைத்தும் கரைந்துவிடும் பனிக்கட்டி போல ஒன்று மட்டும் தீண்டப்படாமல் இருக்கும். விளாடிமிரின் மகிமை, ரஷ்யாவின் மகிமை. அதனை யாராலும் தடுக்க முடியாது. ரஷ்யா உலகின் அதிபதி ஆகிவிடும். இந்தக் கணிப்பு தற்போது உக்ரைன் விஷயத்தில் பலித்து விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டு இருக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.