வெள்ளரிக்காய் தோசை!!



தேவையான பொருட்கள்


பெரிய வெள்ளரிக்காய் 1, சின்ன வெங்காயம் 10, பச்சை மிளகாய் 3, இஞ்சி சிறிய துண்டு 1, தயிர் மூன்று ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், கருவேப்பிலை ஒரு கொத்து, தேங்காய் 2 சில்லு, கோதுமை மாவு அரை கப், கடலை மாவு கால் கப், ரவை கால் கப், எண்ணெய் 5 ஸ்பூன், உப்பு ஒரு ஸ்பூன், கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு.

செய்முறை 

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு, அதில் ஒரு வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி போட்டுக்கொள்ளவேண்டும். அதனுடன் 10 சின்ன வெங்காயம், 3 பச்சை மிளகாய், இஞ்சி சிறிய துண்டு, தயிர் மூன்று ஸ்பூன், சீரகம் ஒரு டீ ஸ்பூன் சேர்க்க வேண்டும்.


இவற்றுடன் 2 தேங்காயை பொடியாக நறுக்கி சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த விழுதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.


இதோடு அரை கப் கோதுமை மாவு, கால் கப் கடலை மாவு, கால் கப் ரவை சேர்த்து கையினால் மாவு முழுவதையும் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.


இவற்றுடன் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி சேர்த்து, கொஞ்சம் கெட்டியான மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, ஒரு கரண்டி மாவு சேர்த்து தோசை தேய்க்கவேண்டும்.


தோசையை நன்றாக எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக எடுத்தால் போதும் சுவையான வெள்ளரிக்காய் தோசை ரெடி... இவற்றுக்கு வெங்காய சட்னி, தேங்காய் சட்னி, காரச் சட்னி எதை வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். 


உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை வேலையில் கூட எடுத்துக்கொள்ளலாம்.





Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.