மனைவியிடம் வசமாகச் சிக்கிய இளம் அமைச்சர்!!

 


அரசாங்கத்தின் இளம் அமைச்சர் ஒருவர், கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் இரண்டு பெண்களுடன் தங்கி இருப்பதை அறிந்த அவரது மனைவி ஹொட்டலுக்குச் சென்று தாக்கியத்தில் அமைச்சரின் கண்ணுக்கு கீழ் சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


சம்பந்தப்பட்ட இளம் அமைச்சர், தனக்கு நெருக்கமான ஒருவர் ஊடாக கொழும்பில் உள்ள பிரபலமான நட்சத்திர ஹொட்டலில் அறை ஒன்றை முன் பதிவு செய்துள்ளார்.


இளம் அமைச்சரின் முன்னாள் காதலி ஒருவரும் அமைச்சருக்கு நெருக்கமான மற்றுமொரு பெண்ணும் அறைக்கு சென்றுள்ளனர்.


இந்த விடயத்தை அறிந்து கொண்ட இளம் அமைச்சரின் மனைவி, அமைச்சரை கையும் களவுமாக பிடிக்கும் நோக்கில் மேலும் இரண்டு உதவியாளர்களுடன் சென்று, நீண்ட நேரம் ஹொட்டலின் வரவேற்புப் பகுதியில் இருந்துள்ளார்.


இளம் அமைச்சர் ஹொட்டலின் மேல் மாடியில் மனைவிக்கு தெரியாமல் மறைந்திருந்துள்ளார். அங்கிருந்து ஹொட்டலின் மின் தூக்கி ஊடாக வெளியேற முயற்சித்த அமைச்சர் மீது அவரது மனைவி தனது கைப்பையை தூக்கி அடித்துள்ளார்.


அப்போதே அமைச்சரின் கண்ணுக்கு கீழ் சிறிய காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


 இளம் அமைச்சரின் மனைவி தனது பிள்ளையுடன்  கம்பஹாவில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.


இதனையடுத்து கம்பஹாவுக்கு சென்ற இளம் அமைச்சரின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் மருமகளை சமாதானம் செய்து கொழும்பு வீட்டுக்கு அழைத்து வந்துள்ளதாகப்  பேசப்படுகிறது.


இந்தச் சம்பவத்தை அடுத்து இளம் அமைச்சர் தனது மாமனாரை சமாதானம் செய்வதற்காக எவ்வித விலை மனுவையும் கோராது கொழும்பில் முக்கியமான இடத்தில் வினோத விளையாட்டுக்களை நடத்தும் முழுமையான அனுமதியை வழங்கியுள்ளதாக அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.