இயற்கையை பசுமையாக வைப்போம் - மர நடுகைத் திட்டம்!!

 


இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏறாவூர் நகரின் அறபா வட்டாரத்தில் பசுமை அழகுத் தாவர மரநடுகை வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.


ஸ்ரீலங்கா மக்கள் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அதன் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு மர நடுகை செய்தனர்.இயற்கைச் சூழலை பசுமை குன்றாது பேணிப் பாதுகாப்பதற்காக கால் நடைகள் தின்னாத பூமரங்கள் நாட்டப்பட்டதாகத் தெரிவித்த  ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் செயலாளர் கே. அப்துல் வாஜித் இத்திட்டத்தோடு இணைந்ததாக சிரமதானமும் மர நடுகையும் தொடர்ந்து இடம்பெறும் என்று தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.