வவுனியா மேல்நீதிமன்றினால் 8 பேருக்கு பிணை!!

 


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியுள்ளது.


2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புளியங்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 3 பெண்கள் மற்றும் 5 ஆண்களுமே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உயர் நீதிமன்றத்தில் அவர்கள் சார்பில் அடிப்படை உரிமை மனு தாக்கலும் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து சட்டமா அதிபரினால் அவர்களை பிணையில் விடுவிப்பதற்கான அனுமதி கடிதம் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தநிலையில் அவர்கள் 8 பேரையும் பிணையில் விடுத்து வவுனியா நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.