'வாராந்தச் சொற்பொழிவும் நாயன்மார் குருபூஜை நிகழ்வும்!!

 


ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்  பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்முகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் 'வாராந்தச் சொற்பொழிவும்    - மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வும்' . சிவஸ்ரீ் . பால. திருகுணானந்தக்குருக்கள்   (ரொறன்ரோ, கனடா)  அவர்களின் அனுசரணையுடன் சமயஜோதி திரு.கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் 

 ஏழாவது   சொற்பொழிவு நிகழ்வு  திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்க   அறநெறிப் பாடசாலை    மண்டபத்தில், 18.02.2022 – வெள்ளிக்கிழமை  இன்று  பி.ப.3.00 மணிக்கு இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி நகுலா ரபேந்திரராசா   அவர்கள் தலைமையில்    இடம்பெறவுள்ளது.
நாவலர் குருபூஜை,  மற்றும் தலைமையுரை நிகழ்வுகளைத் தொடர்ந்து, " சைவ சமய மறுமலச்சியின் தந்தை நாவலர்  " எனுந் தொனிப்பொருளில் சைவப்புலவர்  சித்தாந்தபண்டிதர்  செ.த.குமரன்    அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வும் அதனைத் தொடர்ந்து சொற்பொழிவிலிருந்து வினாக்கள் தொடுக்கப்பட்டு மாணவர்களுக்கான பாராட்டுப் பரிசில்கள் வழங்களும் இடம்பெறவுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.