மூடப்படவுள்ள சப்புகஸ்கந்த!


 சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை (20) முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.


கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சுத்திகரிப்பு நிலையத்தை நாளை முதல் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் கொள்வனவுக்கு பல நிறுவனங்கள் கட்டளை பிறப்பித்துள்ள போதும், குறித்த ஆர்டர் கிடைக்கும் உறுதியான திகதி இதுவரை தெரியவரவில்லை.

எவ்வாறாயினும், கச்சா எண்ணெய் இறக்குமதியின் பின்னர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் திறக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.