ரஷ்யா - உக்ரைன் போர் - வல்லரசு நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடல்!

 


ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் தெரிவித்துள்ளார்.


இருப்பினும், ஜோ பைடன் இதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் காணொளி மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சீன ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணங்களுடன் கூடிய முதல் வாகன பேரணி உக்ரைனின் சுமி நகருக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, உக்ரேனிய நகரங்களில் இருந்து 9,100க்கும் அதிகமான மக்கள் மனிதாபிமான பாதை வழியாக நேற்று (18) வெளியேற்றப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் மரியூபோன் நகரத்தில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது.

ரஷ்ய-உக்ரைன் மீதான படையெடுப்பின் விளைவாக உக்ரைனில் சுமார் 6.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.