துரோகம்!!


எங்கள் மண்ணில்

எதிரியின் ஆர்ப்பரிப்பு
சூழ்ந்த தருணங்கள்
ஒவ்வொன்றும்
இரணங்கள்!
எங்கள் மண்ணை
விழுங்கியவாறு
உறவுகளின் உயிரை
பருகியவாறு
படையெடுத்தபோதுதான்
படைவலுவின் தேவையை உணர்ந்தார்
எங்கள் பெரும்தலைவர்!
தரணியிலே தன்
இனத்திற்காக
எவனும் செய்யாத
அதியுச்ச தியாகத்தை
உலக ஓரவஞ்சகத்திற்குள்
நின்று நிகழ்த்திக்காட்டினார்!
ஒரு எறும்பைக்கூட
உலக அரங்கில்
கொன்ற வரலாறே இல்லை
மாறாக எம்மை நாமே
பாதுகாக்க
தலைவனின் நேர்மையை
புரிந்துகொண்டோர்
புறமுதுகு காட்டாது
முப்படையால் எதிரியின்
முதுகெலும்பை
உடைத்தனர்!
நீங்கள் பயங்கரவாதிகளென
எங்கள் உரிமைப்போரை
நசுக்கினீர்கள்!
ஒரு நெறிபுரளா வீரனின் பிள்ளைகள்
வென்றுவிடக்கூடாது
என்பதால்
கொத்தணிக்குண்டுகளை கொடுத்து
இரசாயன திரவங்களால் எரித்து
எதிரியோடு சேர்ந்து
எமது மக்களை
கொத்துக்கொத்தாக
கொன்றீர்கள்!
ஆனாலும்
எங்கள் இலட்சிய வீரரின் கனவை
உங்களால் சாகடிக்கமுடியவில்லை
காரணம்
நியாயமான கனவுக்காய்
விதைகளானவர்கள்!
அப்படித்தான்
கவரிமான்களாக
எங்கள் வீரமங்கையரும்
போராடினார்!
போர்க்களத்திலே
ஆண்களுக்கு நிகராக
சாதனைகள்
நிகழ்த்தினார்!
இன்றும்
அதே நினைவுகளைத்தான்
இரசியா உக்கிரேன்
போர் இரைமீட்கிறது!
ஆனால்
எமக்கொரு நீதி
அவர்களுக்கொரு நீதி
அவர்கள் மறத்திகள்!
நாங்கள் பயங்கரவாதிகள்!
இறுதிக்கணங்களிலே
உறுதி குலையாது
உரிமைக்காக
உயிரை அற்பணித்து
வெற்றுடலாக வீழ்ந்தபோது
போர்மரபுகளை சாகடித்து
பிணங்களை
புணர்ந்தனர்
அரக்கர்கள்!
இன்னும்
இதற்கு நியாயம்
கிடைக்காது போராடுகின்றோம்!
ஆனால்
உக்கிரேனில் போர்முடிய முன்னரே
இரசியாவுக்கு எதிரான
சர்வதேச விசாரணை
தொடங்கியுள்ளது!
✍️தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.