இராணுவ ஆட்சியே உருவாகும்!!
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை சீர்செய்யப்படாவிட்டால் இராணுவ ஆட்சியே உருவாகும். நாட்டின் தற்போதைய நிலைமையை வைத்து அதனையே கூற முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சர்வகட்சி மாநாட்டுக்கு செல்லபோவதில்லை. சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதால் எவ்வித பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.கொழும்பில் இன்று (22) ஊடகங்களுக்குக் கருத்ரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மக்களுக்கு நீண்டவரிசையில் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதால் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனைக் கட்டுப்படுத்துவதற்காக முக்கிய இடங்களில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலைமை நீடிக்குமாயின் இராணுவ ஆட்சியே உருவாகும் என்றே என்னால் கூற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை