சிரிப்பை சிதற விடுகிறாள்!


 ஒற்றைப் பின்னல் குலைய

சிற்றிடையாள் சின்னப் பெண்ணிவள்
நெற்றி முடி முன் தள்ள
பற்றி இடையில் வைத்த கையில்
முற்றிய சிரிப்போடு
முகத்தை மறைத்து
சத்தமாகச் சில்லறைச் சிரிப்பை
சிதற விடுகிறாள்!
சின்ன சின்ன மகிழ்ச்சிகள்
வண்ண வண்ண கனவுகள்
எண்ணி எண்ணி சிரிக்கிறாள்
எண்ணம் போல வாழ்கிறாள்!
இனிமை வாழ்வு
இளவயது வரைதான்
கனிந்த பருவங்களும்
நங்கை இவ்வரைதான்!
பலத்த சுமைகளும்
தாங்கொணா வலிகளும்
சுமக்கும் காலம் வரையும்
நினைத்த வாழ்வை
உனக்குப் பிடித்தபடி
சிரித்து வாழ்ந்து விடு பெண்ணே!
✍வசந்தமுடன் வசந்✍

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.