யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 பிள்ளைகளின் தாய் மரணம்..!

 


யானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

மன்னார் - அடம்பன் பகுதியில் கடந்த 13ம் திகதி அதிகாலை வீட்டு முற்றத்தில் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து வீட்டிலிருந்த கணவனும், மனைவியும் 

கதவை திறந்து வெளியே வந்துள்ளனர். இதன்போது வீட்டு வளவுக்குள் யானை ஒன்று புகுந்துள்ளதை அவதானித்த நிலையில் கணவர் வீட்டுக்குள் புகுந்து கதவை பூட்டியுள்ளார்.

இதனையடுத்து மனைவி வெளியே ஓடி மறைந்திருந்துள்ளார். இந்நிலையில் மறைந்திருந்த மனைவியை யானை தாக்கியுள்ளது. 

இந்நிலையில் படுகாயமடைந்த ச.சுதா(வயது46) என்ற பெண் மன்னார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 4 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றய தினம் உயிரிழந்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.