அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

 


இந்தியாவின் தூத்துக்குடி இந்திய கடலோர பாதுகாப்பு படை ரோந்து பணியின் போது இந்திய கடல் எல்கைக்குள் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கைது செய்துள்ளதுடன், படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடியில் இருந்து 120 நாட்டின் மைல் கடல் தூரத்தில் கன்னியாகுமரியில் இருந்து தெற்கு நோக்கி 120 தடவை தூரத்தில் இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் இலங்கை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருப்பது இந்திய கடலோர காவல்படை ரோந்து கப்பல் ஆன வஜ்ரா 37 என்ற கப்பலில் உள்ள அதிநவீன தொலைநோக்கி கருவி மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அந்த இலங்கை மீன்பிடி படகை இந்திய கடலோர காவல் படையினர் விரட்டிச் சென்று நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் பிடித்து அதில் இருந்த மீனவர்கள் இலங்கை முன்னா கரை பகுதியைச் சேர்ந்த சிலாபம் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஜூஸ் சம்பத், 55 வயதுடைய யுவன் பிரான்சிஸ் சுனில், புத்தளம் பகுதியை சேர்ந்த வர்ணகுல சூரிய வார்பெட், 37 வயதுடைய ரணில் இண்டிகா, 40 வயதுடைய அசந்தா அண்டன் ஆகிய 5 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, மீன் பிடிக்க பயன்படுத்திய படகு மற்றும் படகில் இருந்த மீன் அனைத்தையும் பறிமுதல் செய்து தூத்துக்குடி தருவைகுளம் மீன்பிடி படகு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து ராமேஸ்வரம் கொண்டு சென்று அங்கு உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.