ஈழத்து பனைமரத்தின் புலம்பல்…!


மாவீரர் சிந்திய குருதியின் ஈரத்தில் இன்னும் உயிரை இறுக்கி பிடித்துவைத்திருக்கும் ஈழத்து பனைமரத்தின் புலம்பல்….


புலிப்பிள்ளை போராட முதல் மார்பு நான்தான்


உலங்கூர்தி பனையடிக்கும் உயர்வட்டு நான்தான்


தூரத்து எதிரிகளை கண்டு சொல்வேன் நான்தான்


பதுங்கு குழியமைக்கவும் பயன்பட்டேன் நான்தான்


மறைவுகட்ட ஓலைகளாய் மறைந்தடிக்க பனங்குற்றி நான்தான்


ஓய்வெடுக்க அடிமரமாகி எதிரிவர நுனிமரமாகி


வழிகாட்ட துணையாக நீரில்செல்ல தெப்பமென பயன்பட்டேன் நான்தான்


உறுதியுடன்தான் நின்று எதிரிகளைதான் வென்று உடம்பெல்லாம் உயிரெல்லாம் விடுதலைக்கேதான் தந்தேன் நான்


தமிழினமே தமிழினமே


மரமாக பிறந்தநானே களமாட துடிக்கின்றேன்

மனம்தளரா உறுதியுடன் மண்பெருமை காக்கின்றேன்.

மனிதனாய் தமிழனாய் பிறந்த நீங்கள் இன்னமும் உயிருக்கு பயந்து உடலை சுமந்து ஓடவா போகின்றாய் ?

அடுத்த தலைமுறையையும் சிங்களவனிடம் கையேந்தவா விடப்போகின்றார் ?

எங்கள் அடுத்த சந்ததியும் சிங்களன் கால்பிடித்துதான் வாழ வேண்டுமா ?

அவர்கள் வாழ்வையும் சிங்களன் துப்பாக்கி முனையில்தான் நகர்தனுமோ?


இழந்தது கணக்கிலில்லை இறுமிச் சாவதில் சிறப்பில்லை இனியிழக்க ஏதுமில்லை அடைய ஒரு புனித கனவு இருக்கின்றது உன்னத இலட்சியம் இருக்கின்றது.மறவாதே தடம் மாறாதே…..


தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

பிரபாசெழியன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.