உக்ரையின் போரும் ஈழப்போரும்!!

 


உக்ரைன் போர் என்பது இரு நாடுகளிற்கிடையே நடைபெறுகின்ற போராகும்.

இருந்த போதும் பொதுமக்களை அதுவும் முன்பு ஒரு காலத்தில் ஒரே நாட்டின் மாகாணமாக இருந்த உக்ரையின் எனப்படும் சகோதர மக்கள் மீது ரஷ்சிய அரசு விமானத்தாக்குதல்கள் கடலில் இருந்து பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் தரையில் இருந்து செல் வீச்சுத் தாக்குதல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதுதான் இருந்தாலும் இரு நாடுகளிற்கிடையே நடைபெறுகின்ற யுத்தம் என்பதினால் இது தவிற்க முடியாதென பல இராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
ஆனால் இலங்கையில் தமிழீழத்தில் சிங்கள அரசு சிங்களவர்களும் தமிழர்களும் வெவ்வேறு மொழிகளை பேசினாலும் ஒரு நாட்டில் உள் சொந்தக் குடி மக்கள் மீது விமானத் தாக்குதல்கள் கடலில் இருந்து பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் தரையில் இருந்து ஆட்டிலெறி மல்றிபரல் போன்ற செல்த்தாக்குதல் அடித்தமையானது ஏற்கத்தகாத மன்னிக்க முடியாத போர்க்குற்றம்.
உண்மையில் இது போன்ற தாக்குதல்கள் இரு நாடுகள் அல்லது பல நாடுகளிற்கிடையே நடைபெறும் போரினில் பயன்படுத்தும் மரபாகும்
மாறாக உள்நாட்டு யுத்தத்தில் அதுவும் சொந்த நாட்டுக் குடிமக்களை ஆக்கிரமிக்கப் பயன்படுத்துவது படு கோழைத்தனமாகும்.
இதில் துருப்புக்காவிகள் எனப்படும் போர்ற் ராங்கிகள் வேறு உக்ரைனில் நேற்றோ கூட்டு நாடுகளில் 9 நாட்டு ஆயுத உதவிகள் இருந்தும் ரஷ்சியப் படைகளை வெல்ல உக்ரையின் படைகளினால் முடியவில்லை.
அதற்கு சமனாக இலங்கையில் தமிழீழத்தின் வன்னியில் அதே 9 நாடுகளினது ஆயுத உதவிகளைப் பெற்ற இலங்கையின் சிங்கள அரசு வன்னியில் கண் மூடித்தனமான வெறித் தாக்குதல்களை கிட்டத்தக்க உக்ரைனிற்க்குச் நிகராக இரசாயினத் தாக்குதல்கள் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் போன்றன அரங்கேற்றியமை எல்லோற்கும் தெரிந்ததே அந்த வகையில் புலிகளிற்கு அது தோல்வியல்ல
ஆக்கம்
வே.கேசவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.