மாவோயிஸ்ட்டுகள் செய்த துரோகி ஒழிப்பு ஈழத்தில் துரையப்பா என்பவரை!

 


இந்தியாவில் மாவோயிஸ்ட்டுகள் செய்த துரோகி ஒழிப்பு

ஈழத்தில் துரையப்பா என்பவரை அழித்ததன் மூலம் துரோகி ஒழிப்பு ஆரம்பமானது.
அதனை சிலர் குறிப்பாக தங்களை கம்யுனிஸ்ட்டுகள் என்று கூறிக்கொள்வோர் தவறு என்று சொல்லி வருகின்றனர்.
ஆனால் இந்த துரோகி ஒழிப்பு என்பது போராட்டம் நடைபெற்ற நடைபெறுகின்ற எல்லா இடங்களிலும் நிகழ்கின்றது.
இந்தியாவில் பீகார் மாநிலம் கயாவில் துரோகம் செய்ததாக கூறி ஒரு குடும்பத்தையே மொத்தமாக மாவோயிஸ்ட்கள் தீர்த்துக்கட்டிய நிகழ்வு நடந்துள்ளது.
துமாரியாவில் உள்ள மோன்பார் கிராமத்தில் நடந்துள்ள இந்த நிகழ்வை தமது கங்காரு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கியதாக மாவோயிஸ்ட்கள் தெரிவித்துள்ளனர்.
அங்குள்ள சர்ஜு போக்தாவின் வீட்டை வெடிவைத்து தகர்த்த மாவோயிஸ்ட்கள், சர்ஜு போக்தாவின் மகன்களான சத்யேந்திர சிங் போக்தா, மகேந்திர சிங் போக்தா மற்றும் அவர்கள் இருவரது மனைவிகள் என 4 பேரை வீட்டு முற்றத்தில் வைத்து தூக்கிலிட்டுள்ளனர்
மேலும், தங்களுக்கு துரோகம் செய்பவர்கள் இதுபோன்ற கடும் தண்டனையிலிருந்து தப்பமுடியாது எனவும் எச்சரித்து அங்கு போஸ்டர் ஒட்டிச் சென்றுள்ளனர் மாவோயிஸ்ட்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.