இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடலட்டைகளுடன் மூவர் கைது

 


இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடலட்டைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுப்பட்டிணம் கடற்கரை பகுதியில் கடல்வழியாக கடல் அட்டைகளை படகு ஒன்றில் இலங்கைக்கு கடத்தப்படுவதாக சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் கடற்கரை பகுதிக்கு சென்று படகில் ஏற்றிக் கொண்டிருந்த படகையும் அதிலிருந்த கடல் அட்டைகளையும் மீட்டுள்ளனர். அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரையும் கைது செய்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது 700 கிலோ கடல் அட்டைகளை கடத்தப்பட இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரியிடம் பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளையும் படகையும் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.