மட்டக்களப்பில் விழிப்புணர்வு!!

 


"தொற்றா நோய்க்கு எதிராக ஒன்றிணைவோம்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டலில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மாவட்ட தொற்றா நோய் பிரிவு , அமிர்தகழி சித்தி விநாயகர் வித்தியாலயம், மாமாங்கேஸ்வரா வித்தியாலயம் மற்றும் பொதுமக்கள் ஒன்றினைந்து தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையினை சனிக்கிழமை (05) முதல் முன்னெடுத்திருந்தனர்.


 மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய துவிச்சக்கர வண்டி பவனி காந்தி பூங்காவை சென்றடைந்ததும் அங்கிருந்து மாணவர்கள் விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு நடைபவணியாக சென்றதுடன்  அதனைத் தொடர்ந்து துவிச்சக்கர வண்டி பவணியும் இடம்பெற்று இருதரப்பினரும் தேவநாயகம் மண்டபத்தை சென்றடைந்ததும் பிரதான அரங்க நிகழ்வுகள் தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.



 மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் அவர்களது தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இவ் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன்  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன்  மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.தயாபரன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பிரதிப்பணிப்பாளர் என்.மயூரன் தொற்றாநோய் பிரிவின் பொறுப்பு வைத்தியதிகாரி எஸ். சிவநாதன்  மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி இளையதம்பி உதயகுமார் தொற்றுநோய் பிரிவின் பொறுப்பு வைத்தியதிகாரி வீ.குணராசசேகரம்  தாய்சேய் நல பிரிவின் வைத்திய பொறுப்பதிகாரி எம்.அச்சுதன் உள்ளிட்ட மேலும் பலர் அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.


 இதன்போது சுகாதார துறைசார்ந்த உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும்  விழிப்புணர்வுச் செயற்பாட்டில் பங்கேற்றிருந்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.