466 ஓட்டங்கள் இலங்கை அணி பின்தங்கியுள்ளது!!

 


இந்தியா -  இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது.


முதலில் துடுப்பாடிய இந்திய அணி 2 ஆம் நாளான இன்று,  8 விக்கெட் இழப்பிற்கு 574 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில்,  முதல் இன்னிங்ஸை முடிவுறுத்தியது.


அணிசார்பில் ரவீந்திர ஜடேஜா ஆட்டம் இழக்காமல் 175 ஓட்டங்களை பெற்றார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ஓட்டங்களை எடுத்திருந்தது.


ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 28 ஓட்டங்களிலும், லஹிரு திரிமான்ன 17 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.


மேலும், ஏஞ்சலோ மெத்யூஸ் 22 ஓட்டங்களுடனும்,  தனஞ்செய டி சில்வா ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.


தற்போது பெதும் நிஸங்க ஓட்டங்களுடனும்,  சரித் அசலங்க ஒரு ஓட்டத்துடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.


2 ஆம் நாளில் இலங்கை அணி, இந்தியாவை விட 466 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில், நாளை 3ஆம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.