கவலை தெரிவித்துள்ள பீ.பி.ஜயசுந்தர!!
"வாழ்நாளின் பெரும்பகுதியை ராஜபக்சக்களுக்காக உழைத்தேன். ஆனால் இப்போது ஒரு தொலைபேசி அழைப்புக்கூட அவர்களிடமிருந்து வருவதில்லை" என ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர கவலை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலாளர் பதவிக்கு பீ.பி.ஜயசுந்தர நியமிக்கப்பட்டு பின்னர் சில காலம் நிதி அமைச்சின் செயலாளராகவும் இருந்தார்.
சில பிரச்சினைகளில் சிக்கிய இவர் கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை இராஜிநாமா செய்த நிலையில் தற்போதுவரை தன்னை ராஜபக்சக்கள் கண்டுகொள்ளவில்லை எனவும் அரச உயர் அதிகாரி ஒருவரிடம் கவலை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கருத்துகள் இல்லை