வெற்றி பெற்றது இந்திய அணி்!!


இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

நேற்று முன்தினம் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி 8 விக்கெட்களை இழந்து 574 பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதனை அடுத்து தனதுமுதலாவது து இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 174 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்த நிலையில், 400 ஓட்டங்கள் பின்தங்கியிருந்த நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை  இலங்கை அணி ஆரம்பித்தது.

இருப்பினும் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழக்க 174 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக நிரோஷன் டிக்வெல்ல ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் ஜடேஜா மற்றும் குசுவின் ஆகியோர் தலா நான்கு விக்கெட்களை வீழ்த்தினர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.