174 ஓட்டங்களோடு சுருண்டது இலங்கை!!


இந்தியா அணியின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 174 ஓட்டங்களுக்குள் இலங்கை அணி சுருண்டுள்ளது.

நேற்று முன்தினம் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 574 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட நிறைவின்போது 4 விக்கெட்களை இழந்து 108 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில், 466 ஓட்டங்கள் பின்தங்கியிருந்த நிலையில், இன்றைய தினம் இலங்கை அணி போட்டியை ஆரம்பித்தது.

இருப்பினும் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஓட்டம் எதுவும் பெறாமல் வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

அவ்வணி சார்பாக பத்தும் நிசங்க ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் 400 ஓட்டங்கள் பின்னிலையில் இலங்கை அணி தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.