எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நால்வர் உயிரிழப்பு!

 


மீரிகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த 76 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எரிபொருளை நிரப்பிவிட்டு தனது முச்சக்கர வண்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற 70 வயதுடைய நபர் உயிரிழந்திருந்தார்.

இதேவேளை நேற்று முன்தினம் கண்டியில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த நபரும் அதிக உஷ்ணம் காரணமாக மயக்கமடைந்து உயிரிழந்தார்.

இன்று வாய்த்தர்க்கம் காரணமாக ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் இதுவரை எரிபொருள் வரிசையில் நின்று மூன்று பேரும் தகராறு ஏற்பட்டதால் ஒருவரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.