ஒரே நாளில் இரு மரணங்கள்- லண்டனில் சம்பவம்!!

 


லண்டனின் புறநகர் பகுதியான Ilford பகுதியில் இடம்பெற்ற ஒரு கத்தி குத்து சம்பவத்தைத் தொடர்ந்து, கொலை விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பெருநகர பொலிஸ் (Met police) அறிவித்துள்ளது.

ஸ்பிரிங்ஃபீல்ட் டிரைவ், நியூபரிப் பாக் இல்பேர்டில் உள்ள ஒரு குடியிருப்பு முகவரியில் ஒரு நபர் கத்தியால் குத்தப்பட்டதாக இன்று பிற்பகல் (19.03.22) சனிக்கிழமையன்று 01:25 மணி அளவில் பொலிசார் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் லண்டன் அம்புலன்ஸ் சேவையாளர்கள் உடனடியாக ஸதலத்திற்கு விரைந்து, உடனடி சிகிச்சைகள் அளித்த போதும், 30 வயதுடைய அந்த நபரை காப்பற் முடியவில்லை எனவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவரது உறவினர்களை அடையாளம் கண்டு தகவல் தெரிவிப்பதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பிரேத பரிசோதனை உரிய நேரத்தில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தக் கொலை தொடர்பில் இரண்டு ஆண்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
Met’s Specialist Crime Command இன் கொலை துப்பறியும் அதிகாரிகள் விசாரணையை வழிநடத்துகிறார்கள்.

விசாரணையின் இந்த ஆரம்ப கட்டத்தில் தகவல் தெரிந்தவர்கள், 101 என்ற எண்ணில் பொலிஸாருக்கு தகவல் வழங்க முடியும். அல்லது @MetCC என்று ட்வீட் செய்து CAD466/19Mar ஐ மேற்கோள் காட்டி தகவலை பரிமாற முடியும். அத்துடன், 0800 555 111 என்ற எண்ணில் க்ரைம்ஸ்டாப்பர்ஸ் என்ற சுயாதீன தொண்டு நிறுவனத்திற்கு உங்களை அடையாளம் காட்டாமல் அநாமதேயமாக தகவலை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.