மாற்றுத் திறனாளிகளின் ஏற்பாட்டில் நடைபவனி!!

 


மாற்றுத்திறனாளிகளை பேசு பொருளாக்கும்  பெரும் நோக்கோடு நடாத்தப்படுகின்ற Tamil Para Sports இந்த முறை மட்டக்களப்பில் ஓகஸ்ட் 20 இல் நடக்க இருக்கின்றது. அதனை முன்னிட்டு  சனிக்கிழமை (19) மட்டக்களப்பில் நடை பயணம் இடம் பெற்றது.


மாற்றுத்திறனாளிகள் , தொண்டு நிறுவனங்கள் மற்றும்   விளையாட்டுக் கழகங்களை சேர்ந்தவர்கள் இணைந்து கொண்டு100 நாட்கள் நடைபெறவுள்ள மனிதநேய நடை பவனியின்  ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டுடனர். 


DATA Charity அமைப்பின் ஏற்பாட்டில் இன் நடை பவனி மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய சந்தியிலிருந்து ஆரம்பமாகி வெபர் மைதானத்தைச் சென்று நிறைவு பெற்றது. தாம் நிர்ணயிக்கும் தூர இலக்கை அது ஒருநாளைக்கு "10000" அடிகளாகவோ "5000" அடிகளாகவோ "3000" அடிகளாகவோ இருக்கலாம் அந்த இலக்கை 100 நாட்கள் தொடர்ந்து நடக்கும் ஒரு சவாலான மனித நேய நடையை (Charity Walk இல்)  DATA Charity கடந்த வருடத்தில் இருந்து நடாத்தி வருகின்றது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.