டொலரின் பெறுமதி இலங்கையில் 260 ரூபா வரை பதிவாகியுள்ளது!


 இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 260 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இதன்படி, டொலர் ஒன்றின் விற்பனை விலை 260 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நாட்டின் முன்னணி வர்த்தக வங்கிகள் சில தமது இணையத்தளங்களில் குறிப்பிட்டுள்ளன.

மேலும், வாங்கும் விலை 250 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை அதிக அளவில் குறைப்பதற்கு கடந்த 7ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி தீர்மானித்திருந்தது.

கடந்த சில மாதங்களாக இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கை மத்திய வங்கி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை விலையை 202.99 ஆக பேணி வந்தது.

எவ்வாறாயினும், உண்டியல் மற்றும் ஹவாலா போன்ற முறைசாரா முறைகள் மூலம் டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.