யாழ். போதனா வைத்தியசாலைக்கு 50 இலட்சம் ரூபா அன்பளிப்பு!

 


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 50 இலட்சம் ரூபா பணம், கனடா நாட்டை சேர்ந்த புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்றினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


அண்மையில் உயிரிழந்த சீலா சுகுமார் ஞாபகார்த்தமாக இந்த உதவி சுகுமார் குடும்பத்தினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமார் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த உதவி வைத்தியசாலை நலன்புரி சேவைக்கு வழங்கப்பட்டு அதன் ஊடாக இருதய சிகிச்சை பிரிவிற்கு தேவையான இயந்திரங்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதன்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமார், பிரதிப் பணிப்பாளர்களான ச.சிறீபவானந்தராஜா மற்றும் சி.யமுனாநந்தா, கனடா - இலங்கை வர்த்தக அமைப்பின் தலைவர், குலா செல்லத்துரை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அத்தோடு கனடா - இலங்கை வர்த்தக அமைப்பினால் ஊடக சந்திப்பு ஒன்றும் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

-நிருபர் பிரதீபன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.