8 மாத குழந்தை உட்பட ஐவர் தீயில் உடல் கருகி பலி!!

 


தீப்பரவல் காரணமாக 8 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரம், தளவபுரம் வர்கலா நகரிலுள்ள வீடொன்றிலேயே ஏற்பட்டுள்ளது. 


அதே இடத்தைச்  சேர்ந்த பிரதாபன் (62) அவரது மனைவி செர்லி (54), மூத்த மகன் அகில் (26), மருமகள் அபிராமி (24) மற்றும் அவர்களது 8 மாத ஆண் குழந்தை ஆகியோரே  உயிரிழந்துள்ளனர்.


இன்று அதிகாலை  வீட்டில் தீப்பரவல் ஏற்பட்டதை அவதானித்த அப்பகுதி பொதுமக்கள், தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு பிரிவினர், உடல் கருகி உயிரிழந்த 5 பேரின் சடலங்களையே மீட்டனர்.


காவல்துறையினர் மற்றும் தடயவியல் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வில் மின் கசிவு எதுவும் ஏற்படவில்லை எனக் கண்டறிந்தனர்.


இதேவேளை, வீடு தீப்பற்றி எரிய ஆரம்பித்த வேளையில் அவ்வீட்டின் அருகே இருந்து 5 உந்துருளிகள் வேகமாக சென்றதாக  நேரில் கண்ட சாட்சியாளர் சிலர்  தெரிவித்த நிலையில்  இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.