உயர் விருதுடன் கௌரவிக்கப்பட்ட உக்ரேனியப் பெண்!!

 


உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமர் ஸெலென்ஸ்கி உக்ரைனின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ விருதான 'ஹீரோ ஒஃப் உக்ரைன்' பட்டத்தை போர் மருத்துவரான சார்ஜென்ட் டெருசோவா இன்னா நிகோலேவ்னா உள்ளடங்கலாக எட்டு இராணுவ வீரர்களுக்கு வழங்க  அனுமதியளித்துள்ளார். 


மரணத்திற்குப் பின் உக்ரைனில் இந்த பட்டம் வழங்கப்பட்ட முதல் பெண்மணி இவர் என்று அறியப்படுகிறது.


போர் மருத்துவரான சார்ஜென்ட் டெருசோவா இன்னா நிகோலேவ்னா, சுமியில் ரஸ்ய படையினரின் தாக்குதலின்போது, பத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் இராணுவ வீரர்களை தன் உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றினார் என்று ஜனாதிபதி ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.


எனினும் ரஸ்ய துருப்புக்களின் பீரங்கித் தாக்குதலால் அவர் மரணமானார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.