மாணவன் ஒருவர் முல்லைத்தீவில் மாயம்!!


 முல்லைத்தீவில் மாணவர் ஒருவர் காணாமல்போட்யுள்ள நிலையில், காணாமல் போன மாணவனை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – உண்ணாப்புலவு பகுதியினை சேர்ந்த 16 அகவையுடைய பாடசாலை மாணவன் ஒருவர் வீட்டை விட்டுவெளியேறி கடந்த 10 நாட்களுக்கு மேலாக வீடு திரும்பவில்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில் மாணவர் மாயமானது தொடர்பில் , பெற்றோரினால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் உண்ணாப்புலவு முல்லைத்தீவினை சேர்ந்த கே.சானுயன் எனும்  மாணவர்  17.03.2022 அன்று மாலைநேர கல்விக்காக மாலை 6.00 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இன்று வரையும் அவர் வீடு திரும்பாத நிலையில் வீட்டார் அச்சமடைந்துள்ளனர்.

அத்துடன் மாணவரை தேடி கண்டுபிடித்து தருமாறு பெற்றோர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர் தொடர்பில் அறிந்தவர்கள் அல்லது தெரிவிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0775690671தொலைபேசி இலகத்திற்கோ அறியத்தருமாறு பெற்றோர் உருக்கமான கோரிகை ஒன்றியும் விடுத்துள்ளனர்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.