மட்டுவில் தெற்கு, வளர்மதி சனசமூக நிலையத்தின் பாலர் விளையாட்டு விழா!!

 


மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் 2022 ம் ஆண்டுக்கான பாலர் விளையாட்டு விழா 30.03.2022 புதன்கிழமை பி.ப 2.00 மணிக்கு வளர்மதி விளையாட்டு மைதானத்தில் வளர்மதி சனசமூகநிலைய தலைவர் திரு. க. திவாகர் தலைமையில்   நடைபெறவுள்ளது. 


இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக திருமதி . ஜீவகுமார் தயாநிதி{ அதிபர், யா/ மட்டுவில் தெற்கு அமெரிக்கன் மிஷன்  தமிழ்கலவன் பாடசாலை}  அவர்களும்  சிறப்பு விருந்தினர்களாக திருமதி. ஜெயப்பிரியா அரவிந்தன் { கிராம அலுவலர் , ஜே - 310 , தென்மட்டுவில்} , திரு. அமிர்தலிங்கம் மதன்ராஜ்            {சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்},  மற்றும் திருமதி பிறேமினி றொகான் { சமுர்த்தி உத்தியோகத்தர் - ஜே 311} ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக திருமதி ஆனந்தி செந்தூரன் { சாவகச்சேரி கோட்ட இணைப்பாளர்} , திருமதி . தவமணி ராஜலிங்கம் { முன்னாள் வளர்மதி சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியர்} ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 


சமூக ஆர்வலர்கள் ,பெற்றோர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைத்து நிற்கின்றனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.