9 மாதப் பெண் குழந்தை பலி


காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்ட 9 மாதப் பெண் குழந்தை ஒன்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளது.


நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமல்ராஜ் டென்ஜான்சிகா என்ற 9 மாதப் பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.

டென்ஜான்சிகாவுக்கு காய்ச்சல் வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து நேற்று (18) காலை பெற்றோர் நெடுந்தீவு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் குழந்தையை மாற்றினர்.

ஆயினும் குழந்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு வரும் முன்னரே உயிரிழந்தது.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

-நிருபர் ரமணன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.