அரிசியின் விலை அதிகரிக்கும் அபாயம்!!
இலங்கையில் எதிர்வரும் சில தினங்களில் ஒரு கிலோ நாட்டு அரிசியின் விலை 200 ரூபாவுக்கும் மேல் அதிகரிக்கும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமை நெல் விலை வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், பெரும் போகத்தின் போது சேதனப் பசளையை பயன்படுத்தி பயிர் செய்ததன் காரணமாக நெல் அறுவடை பெரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன் காரணமாக விவசாயிகள் நெல்லை விற்பனை செய்யாது இருந்து வருகின்றனர். இந்த நிலைமையால் அரிசி விலை அதிகரிக்கும்.
தற்போது ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசி 110 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய 190 ரூபாய் செலவாகிறது.
அடுத்த போகத்தின் போது சரியான முறையில் இரசாயன பசளை விநியோகிக்கப்படவில்லை என்றால், ஒரு கிலோ கிராம் நெல்லின் விலையானது 150 ரூபா வரை அதிகரிக்கும் எனவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
நெல்லின் விலை இவ்வாறு அதிகரிக்குமாயின் ஒரு கிலோ கிராம் அரிசியின் விலை 300 ரூபாயாக அதிகரிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை