உத்தியோக பூர்வமான ரெலோ அறிவிக்கவில்லை- சம்பந்தன்!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் (Gotabaya Rajapaksa) திட்டமிடப்பட்டிருக்கின்ற சந்திப்பில் பங்கேற்பது தொடர்பில் தமிழீழ விடுதலை இயக்கம் எவ்விதமான உத்தியோக பூர்வமான அறிவிப்புக்களையும் எம்மிடத்தில் தெரிவிக்கவில்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (R.Sampanthan) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25-03-2022 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் (TNA) இடையிலான சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டும், கடந்த 15-03-2022 ஆம் திகதியும் திட்டமிடப்பட்ட சந்திப்புக்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தற்போது திட்டமிட்ட சந்திப்பில் பங்கேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அதேநேரம், பங்காளிக்கட்சிகளான தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா (Mavai Senathirajah) ரூபவ் புளொட் தலைவர் சித்தார்த்தன் (D.Siddharthan) ஆகியோரும் குறித்த சந்திப்பில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர்.
எனினும், செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தலைமையிலான ரெலோ இச்செய்தி அச்சுக்கு செல்லும் வரையில் உத்தயோக பூர்வமான அறிவித்தல்கள் எதனையும் வெளியிட்டிருக்கவில்லை. இதனை சம்பந்தன் உட்பட ஏனைய பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக, ஜனாதிபதி கோட்டாபயவிடத்தில் இருந்து சந்திப்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டபோது. உழைப்பை உடன ஏற்றுச் செல்வதைச் தவிர்த்து நல்லெண்ண சமிக்ஞையொன்று ஜனாதிபதி தரப்பிலிருந்து வெளியிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
பின்னர், கடந்த செவ்வாய்கிழமை (15-03-2022) சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதுரூபவ் ஜனாதிபதியுடனான சந்திப்பில் பேச வேண்டிய விடயங்கள் குறித்த நிகழ்ச்சி நிரலுடன் சம்பந்தன் பிரசன்னமாகியிருந்தார்.
இதன்போது, சில பந்திகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு விடயங்கள் இறுதி செய்யப்பட்டன. இருப்பினும் குறித்த விடயங்கள் உள்ளடக்கிய பட்டியலை கோட்டாபயவுடன் பேசுவதற்கு முன்னதாக அவருக்கு அனுப்பி சமிக்ஞையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ரெலோ வலியுத்தியிருந்தது.
இருப்பினும், பேச வேண்டிய விடயங்களை முன்னதாகவே ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதை சம்பந்தன் உள்ளிட்டவர்கள் விரும்பியிருக்கவில்லை.
இந்நிலையில் தற்போது வரையில் ரெலோ இந்த கூட்டத்தில் பங்கேற்குமா இல்லையா என்பதை உறுதிப்படுத்தவுமில்லை. உத்தியோக பூர்வமான அறிவிப்புக்கள் எதனையும் விடுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை