ரஷ்யாவின் ’Z’ குறியீட்டுக்கு அர்த்தம் என்ன!!

 


ரஷ்ய இராணுவ வாகனங்கள், போர்த்தளவாடங்களில் 'Z' என்ற எழுத்து பொறிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா எந்த விளக்கமும் தெரிவிக்காத நிலையில் சமூக வலைத்தளங்களில் இது பேசுபொருளாக உள்ள நிலையில் ரஷ்ய ஆதரவாளர்களும் இதே எழுத்து பொறித்த மேலங்கி அணிந்துள்ளமை வியப்பினை அளித்துள்ளது. 


 

போர்க்களத்தில் ரஷ்ய வாகனங்களை இனங்காண்பதற்காக பொறிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் பலரும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ரஷ்ய மக்கள் சிலரும், தொழிலதிபர்கள் சிலரும் தங்களின் கார் உள்ளிட்ட வாகனங்களில் 'Z' என்ற குறியீட்டைப் பொருத்தி வருவதாக தெரியவருகின்றது. 


இது தவிர  'Z'  சில ரஷ்ய வாகனங்களில் ஸ முக்கோணமும் அதன் இருபகுதிகளிலும் இரண்டு கோடுகளும் இருக்கும் குறியீடும்   ஒரு வட்டம் அதன் உள்ளே மூன்று புள்ளிகள் இருக்கும் குறியீடும், ஒரு பெரிய முக்கோணம், அதனுள் சிறிய முக்கோணமும் கொண்ட குறியீடும் இடம்பெற்றுள்ளன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.