இலங்கை மக்களிற்கு மிகப் பெரும் செய்திகள்!!


தற்போதுள்ள மின்கட்டணத்தை விட 500 சதவீத்தால் மின்கட்டணத்தை உயர்த்தும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மின்கட்டணத்தை உயர்த்தும் யோசனையின் கீழ் எதிர்பார்க்காத அளவு மின்சாரக்கட்டணம் அதிகரிக்கக்கூடும். அதனை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத. இன்று அல்லது நாளை மின்கட்டணம் அதிகரிக்கப்படும்.

25 முதல் 50 சதவீதத்தால் கட்டணம் அதிகரிக்கப்படுமா? என்பது குறித்து தெரியவில்லை. கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய மின்சார சபை முன்வைத்துள்ள யோசனைக்ப்படி, முன்னர் காணப்பட்டதை விடவும் 500 சதவீதத்தால் அதிகரிக்கும்.

மின்சாரத்தைப் பயன்படுத்தாது எதிர்வரும் நாள்களில் மின்குமிழ் மற்றும் மின்விசிறி என்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைதான் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான கருத்துக்கள் கூறப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் பாராளுமன்றத்திலும் சூடுபிடித்தது விவாதம்,

நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என விடயத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் சனத் நிஸாந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார நாடாளுமன்றின் இன்றைய எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தேவையேற்படும் பட்சத்தில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எதிர்வரும் காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஸாந்த தெரிவித்துள்ளார்.

மின்சாரம்  - நீர் கட்டனங்கள் உயர்த்தப்படமாட்டாது என அமைச்சர்கள் தெரிவித்தாலும் இலங்கையின் விலைவாசி உயர்வால் அடுத்து வரும் நாட்களில் இவற்றுக்கான விலை உயர்வை யாரும் தடுக்க முடியாது என பொருளியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.