நாம் சாகமாட்டோம்...!!
விலை இன்னும் ஒருமடங்கு அதிகரித்தாலும் நாங்கள் சாகவே மாட்டோம்.
எங்கள் அனுபவங்களை விசாரித்துப்பாருங்கள். ஆயிரம் இடம்பெயர்வுகளை சந்தித்தோம் நாங்கள் சாகவே இல்லை.
பலவருடம் மின்சாரமின்றி வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.
எரி வாயு என்றால் என்னவென்று தெரியாமல்
வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.
எரிபொருள் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.
தொலைபேசி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள்
சாகவே இல்லை.
தம்புள்ளை மரக்கறி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள்
சாகவே இல்லை.
சீனி இன்றி பனங்கட்டியுடன் பிளேன்ரீ குடித்தோம் நாங்கள் சாகவே இல்லை.
அங்கர் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.
பசளை இன்றியிம் விவசாயம் செய்தோம் நாங்கள் சாகவே இல்லை.
வீட்டில் தேங்காய் எண்ணை காச்சிப்பாவித்தோம் நாங்கள் சாகவே இல்லை.
வீதி இன்றியும் சந்தோசமாகக் திரிந்தோம் நாங்கள்
சாகவே இல்லை.
புறோயிலர் கோழியின்றியும் நிறைவாக உண்டோம் நாங்கள் சாகவே இல்லை.
"இனவாதப் படுகொலையால் மட்டும் அதிகமாகச் செத்தோம் வெறுங்கையுடன் சென்றோம்.
சென்றதைவிட சிறப்பாக மீண்டுவந்தோம். அதனால் நாம் சாகப்போவதே இல்லை.
வயலுண்டு தோட்டமுண்டு, பனையுண்டு. தென்னையுண்டு, கடலுண்டு. குளமுண்டு, மீனுண்டு உப்புண்டு பகிர்ந்துண்டு பல்லுயிரோம்பும் பண்புண்டு. நாம் சாகப்போவதே இல்லை.
நெருப்பிலும் நீந்திக் கரைசேர்வோம். உங்களால் இவ்வளவும் தாண்டி நீந்திக் கரைசேர முடியுமானால் மனம் தளராமல் இருங்கள்....
ஏன் என்றால் நாம் தமிழர்
கருத்துகள் இல்லை