ரயிலில் இருந்து விழுந்து வௌிநாட்டவர் பலி!

 


கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே ரயிலில் பயணித்த எகிப்திய சுற்றுலா பயணி ஒருவர் பட்டிபொல புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.


பின்னர் அவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (16) இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் அஹமட் மொஹமட் அப்துல் ஹமிட் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த எகிப்திய பிரஜை, கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சுற்றுலா பயணம் மேற்கொண்டு இலங்கை வந்து எல்ல புகையிரத நிலையம் வரை உடரட்ட ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது நேற்று மதியம் இவ்வாறு தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.

நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வெளிநாட்டவர் மேலதிக சிகிச்சைக்காக அவரது நண்பர்களால் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெளிநாட்டு பிரஜை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.