ஐ. நாவின் ஆலோசனைக் குழுவில் தமிழர்!!

 


சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், ஐநாவின் புதிய உயர்மட்ட பலதரப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். 12 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் உலகத் தலைவர்கள், நிபுணர்கள், அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.


உலகம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை­களை குழு ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்கும். இந்தப் பரிந்துரைகள் 2023ல் நடைபெறவுள்ள ஐநா உறுப்பு நாடுகள் பங்கேற்கும் உத்தேச எதிர்கால உச்சநிலை மாநாட்டில் தெரிவிக்கப்படும்.


ஐக்கிய நாடுகள் சபையில் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் புதிய ஆலோச­னைக் குழு பற்றிய விவ ரங்களை நேற்று வெளியிட்டார். “புதிய குழுவுக்கு ஐநா பல் கலைக்கழக கொள்கை ஆய்வு நிலையம் ஆதரவு வழங்கும்,” என்று நேற்றைய அறிக்கையில் தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.


கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் உல­கம் எதிர்­நோக்­கும் முக்­கி­யப் பிரச்சி னைகள் வலு­வான முறை­யில் நிர்­வ­கிக்­கப்­பட வேண்­டும் என்று திரு குட்­டெ­ரஸ் வலி­யு­றுத்தி இருந்­தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.