இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

 


இந்திய வானிலை ஆய்வு மையம் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுவடையும் என  தெரிவித்துள்ளது.


இந்த புயலுக்கு 'அசானி' என பெயரிடப்பட்டுள்ளது.


காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் தீவை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருவதால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.


இதனால் அந்தமான் நிக்கோபா் பகுதிகளில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் நாளை மறுநாள் வரை மூடப்பட்டுள்ளன.


எனவே அந்தமான், நிக்கோபாா் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.